மயிலாடுதுறை:தரங்கம்பாடி கடற்கரை மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு டென்மார்க் நாட்டவரால் கி.பி. 1620இல், புகழ்வாய்ந்த டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது.
இந்தக் கோட்டையில், சுமார் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இரண்டு தளங்களில் உள்ளன. பண்டகசாலை, சிறைச்சாலை, சமையல் அறை, ராணுவ வீரர்களுக்கான அறைகள் அமைந்துள்ளன. கோட்டையின் உள்புறத்தில் புல்வெளித் தளம், முதல் தளத்தைப் பார்வையாளர்கள் சுற்றிப் பார்க்க நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
தொல்லியல் துறையின் அருங்காட்சியகமாக விளங்கும் இதில் டேனிஷ் கால நாணயங்கள், கல்வெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. டேனிஷ் கோட்டையைச் சுற்றிலும் முழுவதும் பிரமாண்டமான மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.