தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழையினால் சேதமடைந்த நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை! - மழையினால் சேதமடைந்த நெற்பயிர்கள்

நாகப்பட்டினம்: அறுவடைக்கு சில நாட்களே உள்ள நெற்பயிர்கள் மழையினால் நனைந்து முளைத்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

heavy rain
heavy rain

By

Published : Jan 21, 2020, 8:25 AM IST

Updated : Jan 21, 2020, 9:10 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, சடையன்காடு, சல்லிகுளம், விழுந்தமாவடி, காமேஸ்வரம், உள்ளிட்ட மானாவாரி பகுதிகளில் தற்போது நெற்பயிற்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் பெய்து வரும் கன மழையால், சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழையில் மூழ்கி சேதமடைந்தன.

மழைநீரில் சேதமடைந்த நெற்பயிர்கள்

இதனால், மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள், மீண்டும் முளைக்க ஆரம்பித்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கடன் வாங்கி சாகுபடி செய்திருந்த விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

பாரம்பரிய நெல் ரகங்களின் ’காப்பான்’

மேலும், பயிர் சேதத்தை வேளாண் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated : Jan 21, 2020, 9:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details