மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்காக மாவட்டம் முழுவதும் 103 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து 1 லட்சத்து 85 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1 லட்சத்து 60 ஆயிரம் டன் நெல் கிடங்கு, வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சம்பா உற்பத்தி அதிகமானதால் கிடங்குகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. மேலும் 25 ஆயிரம் டன்கள் ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ளது.
மயிலாடுதுறையில் மழை: நெல் மூட்டைகள் சேதம் - அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் சேதம்
மயிலாடுதுறை: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது.
paddy
இந்நிலையில், மயிலாடுதுறையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் வில்லியநல்லூர், மல்லியம், முளப்பாக்கம், மங்கைநல்லூர், பெருஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்படு இருந்த பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நினைந்து சேதமடைந்துள்ளது. அவற்றை உடனடியாக கிடங்குக்கு கொண்டு செல்ல அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.