மயிலாடுதுறை மாவட்டம் நரசிங்கநத்தம் ஊராட்சி கீழக்காலனி, சாமியாங்குளம் ஆகிய கிராமத்தில் வாய்க்கால் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக 40க்கும் மேற்பட்ட பட்டியலினத்தவர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
இவர்கள் பட்டா கேட்டு காத்திருக்கும் நிலையில், நரசிங்க நத்தம் களம் புறம்போக்கு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாகக் கூறி ஜேசிபி வாகனம் கொண்டு மற்றொரு தரப்பினர், சுத்தம் செய்துள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த பட்டியலின பிரிவினர், 25க்கும் மேற்பட்ட குடிசைகளை அமைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறையினர், பெரம்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.