தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - வானிலை அறிக்கை தற்போது

நாகை: வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பரப்பில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Cyclone warning signal 1
நாகை துறைமுகம் அலுவலகம்

By

Published : Oct 22, 2020, 4:45 PM IST

வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பரப்பில் 180 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 23ஆம் தேதி மேற்கு வங்கம் சாகர் தீவுகள் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டானது, புயல் மூலம் உருவாகக்கூடிய திடீர் காற்றுடன் கூடிய மழை பெய்யும் வானிலையை குறிக்கிறது.

இதையும் படிங்க: மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டவர் 4 மாதங்களுக்கு முன்பே மரணம்!

ABOUT THE AUTHOR

...view details