புரெவி புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள தாழஞ்சேரி ஊராட்சி பகுதியில் செல்லும் பழவாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கரையை கடந்து தண்ணீர், கரையோரம் தாழ்வான பகுதிகளில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், கரையோர பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.