மயிலாடுதுறை: வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Cyclone Mandous: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை! - Bay of Bengal
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
cyclone Mandous: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
மேலும் மீனவர்கள் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலோர பாதுகாப்பு காவல் நிலைய போலீசார் தரங்கம்பாடி, சீர்காழி, பூம்புகார், பழையார், வானகிரி, திருமுல்லைவாசல், சந்திரபாடி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:திருவண்ணாமலைக்கு சென்று திரும்பியபோது விபத்து: 6 பேர் உயிரிழப்பு