தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு: ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு உணவளித்த தன்னார்வலர்கள்! - Fifty living organisms without food

நாகை: ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு தன்னார்வலர்கள் உணவளித்தனர்.

தன்னார்வலர்கள் அளித்த உணவை ஆர்வமுடன் சாப்பிடும் நாய்கள்
தன்னார்வலர்கள் அளித்த உணவை ஆர்வமுடன் சாப்பிடும் நாய்கள்

By

Published : Apr 17, 2020, 12:15 PM IST

உலகம் முழுவதும் பல லட்சம் மக்களை பாதித்துள்ள காரோனா பெருந்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் நடமாட்டம் என்பதே தடை செய்யப்பட்டுள்ளதால் ஐந்தறிவு ஜீவராசிகள் உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றன. மேலும், ஆதரவற்ற மனிதர்களுக்குக்கூட பல்வேறு தரப்பிலிருந்து உணவுகள் கிடைத்துவிடுகின்றன. ஆனால், ஐந்தறிவு ஜீவராசிகள் இந்த ஊரடங்கு உத்தரவால் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றன.

உணவின்றி தவித்த நாய்களுக்கு உணவளித்த தன்னார்வலர்கள்

இந்நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள், தற்போது உணவின்றி சிரமப்படுவதை அறிந்த வேளாங்கண்ணி உதவும் கரங்கள் அமைப்பு, ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் போன்ற அமைப்புகள் இணைந்து நாள்தோறும் மாலை நேரங்களில் சிக்கன் கலந்த உணவை அந்த நாய்களுக்கு அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:அத்தியாவசிய பொருள்கள் விநியோகிக்கும் காவல் துணை ஆணையர்!

ABOUT THE AUTHOR

...view details