தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவால் கருவாடு விலை கடும் வீழ்ச்சி - உற்பத்தியாளர்கள் வேதனை - கருவாடு உற்பத்தியாளர்கள்

நாகப்பட்டினம்: ஊரடங்கு உத்தரவு காரணமாக கருவாடுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என நாகை கருவாடு உற்பத்தியாளர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

Curfew orders drop dry fish prices
Curfew orders drop dry fish prices

By

Published : Aug 12, 2020, 10:57 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் பிடித்து வரும் மீன்கள் விற்பனைக்குபோக மீதமுள்ள கொடுவா, வஞ்சிரம், நெத்திலி, திருக்கை, சுறா, சங்கரா, கானாங்கெழுத்தி உள்ளிட்ட மீன்கள் கருவாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கருவாடுகள் விற்பனைக்கும், கோழி தீவனத்திற்காகவும் நாகையிலிருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், தற்போது கரோனா ஊரடங்கின் காரணமாக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளியூர்களுக்கு கருவாட்டை ஏற்றுமதி செய்ய முடியாததால், கருவாடுகளின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக, நாகை கருவாடு உற்பத்தியாளர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு எங்களுக்கு ஒரு நல்ல தீர்வைக் காண வேண்டும் என்றும், கருவாடு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details