தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழையால் சேதமடைந்த பயிர்கள்: வயலில் இறங்கி பார்வையிட்ட முதலமைச்சர்

farmers
farmers

By

Published : Dec 9, 2020, 6:47 PM IST

Updated : Dec 10, 2020, 7:16 AM IST

18:25 December 09

சேதமடைந்த பயிர்களை பார்வையிட்ட முதலமைச்சர்

நாகப்பட்டினம்: புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை முதலமைச்சர் பழனிசாமி நேரடியாக வயலில் இறங்கி பார்வையிட்டார்.

புரெவி புயலால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகமாகவே உள்ளது. 

புரெவி புயலால் பாதிப்படைந்த நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் கடந்த 2 நாள்களாக வெள்ள சேதங்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தரங்கம்பாடி, நல்லாடை கிாரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை நேரடியாக பார்வையிட்டார். 

தரங்கம்பாடி தாலுகாவில் மட்டும் 29 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. 700 ஏக்கர் தோட்டக்கலைப் பயிர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

5 நாள்களுக்கும் மேலாக தண்ணீரில் மூழ்கியுள்ள கதிர்விட்ட நாற்றுகளை தண்ணீரில் இறங்கி எடுத்து வந்து விவசாயிகள் முதலமைச்சர் பழனிசாமியிடம் காண்பித்து, வேதனையடைந்தனர். 

தொடர்ந்து விவசாயிகளின் கருத்துக்களை கேட்ட முதலமைச்சர் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி உரிய நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தார். 

இதையும் படிங்க:திமுக உள்கட்சி பூசலை மறைக்க அதிமுக மீது புகார் - அமைச்சர் ஆர் பி உதயகுமார்

Last Updated : Dec 10, 2020, 7:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details