தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - மயிலாடுதுறைச் செய்திகள்

நாகை: மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்  மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து ஆர்பாட்டம்  மயிலாடுதுறைச் செய்திகள்  cpim protest against union budget 2020
மயிலாடுதுறையில் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்பாட்டம்

By

Published : Feb 18, 2020, 11:03 AM IST

மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மயிலாடுதுறை வட்டச் செயலாளர் மேகநாதன் தலைமையேற்றார்.

ஆர்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை திரும்பப் பெறவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு ரயில்வே துறைக்கு ரூ.10 ஆயிரம் மட்டும் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்தும் முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறையில் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க:குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details