நாகையில் நிகழ்ச்யொன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ‘மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தவிருக்கிறோம்.
அதனை தமிழ்நாடு எம்பிகள் மூலம் குடியரசுத் தலைவரிடம் கொடுத்து கோரிக்கையை வலியுறுத்தவுள்ளோம். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஓ.எஸ். மணியன் கூறுவதை ஏற்க முடியாது. நாளை அவரே இந்திய குடிமகன் இல்லை என்ற நிலை வரலாம். ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எந்த அனுமதியும் பெறவேண்டிய அவசியும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது கண்டத்திற்குரியது.