நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் பனங்குடியில் சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. பொதுத் துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தில் பனங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் சிபிசிஎல் ஆலை விரிவாக்கத்திற்காக, அங்கு பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாகை பனங்குடி சிபிசிஎல் ஆலையின் உள்ளே, நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று (ஜன. 06) மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.