நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள வடரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜோதி. இவரின் இரண்டு மாடுகளும் வயலில் மேய்ந்து கொண்டிருந்தபொழுது, திடீரென இடி இடித்துள்ளது.
மின்னல் தாக்கி பசுமாடுகள் உயிரிழப்பு
சீர்காழி அருகே மின்னல் தாக்கி இரண்டு பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
Dead cows
அப்போது மின்னல் தாக்கியதில், அவரின் இரண்டு பசு மாடுகளும் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து இறந்தன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், கொள்ளிடம் காவல் துறையினர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.