நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை ஊரடங்கு உத்தரவால் மார்ச் 20 ஆம் தேதி முதல் வேளாங்கண்ணி பேராலயம் மூடப்பட்டது மட்டுமின்றி, பக்தர்கள் வருகைக்கான அனுமதியும் தடை செய்யப்பட்டது.
ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடித்துவருவதால், நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பூட்டியிருந்த பேராலயத்தில் சிலுவை முத்தி செய்யும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு, மூன்று பாதிரியார்கள் மட்டுமே பங்குப் பெற்ற புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.