பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்காக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கால நேரம் பாராமல் சேவையாற்றிவருகின்றனர்.
கைதட்டி, மணியோசை எழுப்பி கரோனா சேவைபுரிபவர்களுக்குப் பாராட்டு - நாகப்பட்டினம் பொதுமக்கள்
நாகப்பட்டினம்: கரோனா வைரஸ் சேவைப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் கைதட்டியும், மணியோசை எழுப்பியும் பாராட்டுத் தெரிவித்தனர்.
கரோனா சேவைப்பணியாளர்களுக்கு மரியாதை
இப்பணிக்காக நன்றி செலுத்தும்விதமாக நாகையில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள், விவசாயிகள் என பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து கை தட்டி மணியடித்து உற்சாகத்துடன் பாராட்டும், மரியாதையும் செலுத்தினார்கள்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்புக்கு உதவிக்கரம் நீட்டும் ஆனந்த் மகேந்திரா