மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி பண மோசடி செய்த தம்பதியினரைத் தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா, தெற்கு அகஸ்தியர்புரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி மகன் அருண்குமார் (36), இவரது மனைவி கிருஷ்ண கோகிலா (29).
இவர்கள் அரசு வேலை வாங்கித் தருவதாக மயிலாடுதுறையில் ஏழு பேரிடம் ரூ.14 லட்சம் வாங்கிக்கொண்டு, வேலை வாங்கித் தராமல் ஏமாற்றித் தலைமறைவாகிவிட்டதாக திருவிழந்தூர் கே.கே. நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சித்தார்த் (30) என்பவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகார் அளித்தார்.
இது குறித்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கடந்த சில நாள்களுக்கு முன்புவரை மயிலாடுதுறை கூறைநாட்டில் வசித்துவந்த தம்பதியினர் இருவரும், கடந்த சில நாள்களுக்கு முன் திடீரென வீட்டைக் காலிசெய்து விட்டுத் தப்பியோடி காரைக்குடியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.