தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் இப்படி அறிவுறுத்தியுள்ளாரா? பொதுமக்கள் அச்சம்! - corono treatment viral video Mayiladuthurai

மயிலாடுதுறை: கரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியதாக அரசு மருத்துவமனை செவிலியர் பேசும் காணொலி வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தயுள்ளது.

மாவட்ட ஆட்சியர் இப்படி அறிவுறுத்தியுள்ளாரா?
மாவட்ட ஆட்சியர் இப்படி அறிவுறுத்தியுள்ளாரா?

By

Published : Aug 12, 2020, 2:02 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் அரசு பெரியார் பொது மருத்துமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 14 நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு பிரிவில் 200 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ன. மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 35 பேர் சீர்காழி அரசு மருத்துமனையிலும், 11 பேரை தனியார் கல்லூரி விடுதியிலும் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் இப்படி அறிவுறுத்தியுள்ளாரா?

இந்நிலையில் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் நபர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

கரோனா தொற்று சமூகப் பரவலாகிவிட்டதால் நாள்தோறும் 20 முதல் 50 பேர் வரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்காக வந்தவர்களிடம் எழு நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பிவிடவும், மீண்டும் கரோனா தொற்று இருந்தாலும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாக செவிலியர் பேசும் காணொலி வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி கொள்முதலை நிர்வகிக்க நிபுணர் குழு அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details