நாளுக்கு நாள் நாட்டையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சமய மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களில் 11 பேருக்கும், தனியார் மருத்துவர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் நோய் தொற்று உறுதியானது.
இந்நிலையில் சமய மாநாட்டிற்கு சென்று தொற்று உறுதியானவர்களின் உறவினர்கள் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தபட்டு கண்காணிப்பில் இருந்தனர்.
அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் 12 பேருக்கு கோவிட் -19 வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதில், நாகூரைச் சேர்ந்த 3 பேருக்கும், திட்டச்சேரியைச் சேர்ந்த 9 பேருக்கும் கரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.