உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மயிலாடுதுறையில் நகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
நகராட்சி நிர்வாகம் சார்பில், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் தலைமையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும்வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில்வே சந்திப்பு உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
பேருந்தின் கைப்பிடி, இருக்கைகள் ஆகியவற்றின் மூலம் நோய்த்தொற்று பரவாமல் இந்தத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பேருந்து பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளிலும் துப்புரவுப் பணியாளர்கள் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தினர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை