கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய் ஸ்தலம், திருவெண்காடு புதன் ஸ்தலம், கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலம் உள்ளிட்ட கோயில்கள் மூடப்பட்டுள்ளன.
மார்ச் 31ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என சீர்காழி வட்டாட்சியர் சாந்தி தெரிவித்தார்.