நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் சஷ்டி பூர்த்தி திருமணங்கள் ஏராளமாக நடைபெறும்.
அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு தீவிர பரிசோதனை - Nagapattinam coronavirus Preventive action
நாகப்பட்டினம்: திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
Coronation test at Thirukadaiyur Temple
இதனால் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்து விட்டுச் செல்வர். இந்நிலையில், தற்போது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாகக கோயிலுக்கு வரும் அனைத்துப் பக்தர்களும் தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
இதையும் படிங்க:'காய்ச்சல் உள்ளவர்களுக்கு அண்ணாமலையார் கோயிலுக்குள் அனுமதி கிடையாது'