தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் கரோனா பாதித்த பகுதியில் சிறப்பு அலுவலர் ஆய்வு - கரோனா வைரஸ்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான பகுதியில் காவல் துறை ஆய்வாளர், தஞ்சாவூர் சரக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பு அலுவலர் சாரங்கன் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

special officers inspection
corona virus inspection

By

Published : Apr 22, 2020, 4:02 PM IST

Updated : Apr 22, 2020, 8:50 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பகுதியைச் சுற்றியுள்ள 12 வீதிகளின் நுழைவு வாயில்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

சீல் வைக்கப்பட்ட பகுதிக்கு வந்த மாவட்ட காவல் ஆய்வாளர், தஞ்சாவூர் சரக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பு அலுவலர் சாரங்கன் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பிறகு அவர்களை பாதுகாப்பாக இருக்கவும், முகக்கவசங்கள் அணியவும், தனிமையில் இருக்கவும் கேட்டுக்கொண்டனர்.

நாகையில் கரோனா பாதித்த பகுதியில் சிறப்பு அலுவலர் ஆய்வு

தொடர்ந்து சித்தர்காடு அண்ணா திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள வெளிமாநிலத்தைச் சேர்ந்த போர்வை, பஞ்சுமிட்டாய் வியாபாரிகளை சந்தித்த காவல் துறை ஆய்வாலர் அவர்களுக்கு கோதுமை மாவு, காய்கறிகளை வழங்கினார்.

ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகேஷ், துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:வீடியோ எடுத்தவருக்கு பளார் விட்ட உதவி ஆய்வாளர்!

Last Updated : Apr 22, 2020, 8:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details