நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 31 நபர்களுக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்படி, நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் சாலைகளில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்து காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி நுழைவாயில், பரவை மார்க்கெட் ஆகிய இடங்களில் கரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் ’விழித்திரு! விலகியிரு!! வீட்டிலிரு!!! தனித்து இருப்போம், வீட்டிலேயே இருப்போம், பாதுகாப்பாய் இருப்போம்’ உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.