தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு: 15 நபர்கள் மட்டுமே கலந்துகொண்ட திருமணம் - corona virus

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாப்பிள்ளை, மணப்பெண் உள்பட திருமணத்தில் கலந்தகொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

marriage
marriage

By

Published : Mar 30, 2020, 1:42 PM IST

நாகை மாவட்டம் சீர்காழி நிம்மேலி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர் வீரமணி. இவரது மகள் சந்திரலேகாவுக்கும் செந்தில்குமார் என்பவருக்கு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோயிலில் திருமணமும், மண்டபத்தில் வரவேற்பும் இன்று நடைபெறும் என பத்திரிக்கை அச்சடித்து ஊர் முழுவதும் வழங்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததால், மண்டபத்தை ரத்துசெய்துவிட்டு திருமணத்தை எளிமையாக நடத்த இருவீட்டாரும் முடிவெடுத்தனர்.

15 நபர்கள் மட்டுமே கலந்துகொண்ட திருமணம்

அதன்படி, செந்தில்குமாரின் ஊரான தலைஞாயிறு பகுதியில் உள்ள இவர்களின் குலதெய்வ அம்மன் கோயிலில் திருமணத்தை எளிமையாக இன்று நடத்தினர். அப்போது மாப்பிள்ளை, மணப்பெண் உள்ளிட்ட திருமணத்தில் கலந்தகொண்ட அனைவரும் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக முகக்கவசம் அணிந்திருந்தனர்.

அரசு அறிவித்த உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, 15 நபர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'மக்கள் ஊரடங்கு ஒருபுறம்... தடபுடலான திருமணம் மறுபுறம்' - வைரஸின் வீரியத்தை உணராத திருமண வீட்டார்!

ABOUT THE AUTHOR

...view details