தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் ஒரே கிராமத்தில் 6 பேருக்கு கரோனா உறுதி! - Corona for six people in the same village

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி அருகே ஒரே கிராமத்தில் ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர்களுடன் தொடர்பிலிருந்த 46 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நாகையில் ஆறு பேருக்கு கரோனா
நாகையில் ஆறு பேருக்கு கரோனா

By

Published : Jul 8, 2020, 11:13 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் கிராமத்தில் ஆறு பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 46 குடும்பத்தினர் கண்டறியப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் வசித்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி, ப்ளீச்சிங் பவுடர் கொண்டு தெளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்கள் அக்கிராமத்தில் யாருக்கேனும் சளி, இருமல் உள்ளதா என வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்மாவட்டத்தில் ஒரே கிராமத்தில் ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 314ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details