தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு ஆரம்ப சுகாதார நிலைய கர்ப்பிணி பெண் மருத்துவருக்கு கரோனா! - அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

மயிலாடுதுறை: அரசு ஆரம்ப சுகாதார நிலைய கர்ப்பிணி பெண் மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

By

Published : Aug 26, 2020, 3:19 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் இளம்பிறை. இவர் கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்குள்ள செவிலியர்களுக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு இன்று( ஆகஸ்ட் 26) முதல் 3 நாள்களுக்கு மூடப்பட்டுகிறது.

மருத்துவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details