மயிலாடுதுறை மாவட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில், புதிதாக ஏற்படுத்தப்பட்ட கரோனா சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. தொற்றிலிருந்து முழுவதுமாக விடுபட தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் 6 டன் ஆக்ஸிஜன் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனைக்கு தேவையான திரவ ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.