இஸ்லாமியர்களின் முக்கிய கடமையான ரமலான் நோன்பு நாளை ஏப்ரல் 25ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ரமலான் நோன்பு காலத்தில், இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நாகையை அடுத்த நாகூரில் உள்ள தனியார் திருமண அரங்கில் அம்மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல், வட்டாட்சியர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சமூக இடைவெளியைப் பின்பற்றி நடந்தக் கூட்டத்தில் நோன்பு கஞ்சி காய்ச்சக் கூடாது, கூட்டத்தை கூட்டி பொருள்கள் எதும் விநியோகம் செய்யக்கூடாது, கூட்டம் அதிகம் கூடக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.