தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாணவனுக்கு கரோனா - திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி

நாகப்பட்டினம்: அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பள்ளி மாணவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சையளித்த மருத்துவர்கள் உள்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாணவனுக்கு கரோனா
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாணவனுக்கு கரோனா

By

Published : Apr 20, 2020, 6:37 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் விற்குடி கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு குடல்வால் (அப்பெண்டிஸ்சைட்டிஸ்) அறுவை சிகிச்சை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின் மாணவனுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதால் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அவனுடைய ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் மாணவனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு தளர்வை மறுபரிசீலனை செய்க- சுகாதாரத் துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details