தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊழியருக்கு கரோனா... மூடப்பட்ட நகராட்சி அலுவலகம் - corona positive for municipality worker

நாகை: மயிலாடுதுறை நகராட்சி ஊழியருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டத்தையடுத்து,  நகராட்சி அலுவலகம் தற்காலிமாக மூடப்பட்டது

  ஊழியருக்கு கரோனா, நகராட்சி அலுவலகம் மூடல்
ஊழியருக்கு கரோனா, நகராட்சி அலுவலகம் மூடல்

By

Published : Jul 19, 2020, 12:23 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்துவரும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும் நகராட்சி அலுவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக நகராட்சி அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சுகாதார பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மூன்று நாள்கள் நகராட்சி அலுவலகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details