நாகப்பட்டினம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை வளாகத்தில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இங்கு இதுவரை 2 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்று நலமாக வீடு திரும்பியுள்ளனர்.
200 படுக்கை வசதி கொண்ட இந்த சிகிச்சை மையத்திற்கு தினந்தோறும் நோயாளிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 191 நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனர். ஐந்து மாடிக் கட்டடத்தில் நான்கு மாடிகள் வரை நோயாளிகள் உள்ளனர்.