கரோனா வைரஸ் தொற்று நாகை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் நாகை மாவட்ட சிறையில் பணிபுரிந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் நாகை மாவட்ட சிறையில் பணிபுரிந்து வருகிறார்.
சிறைப் பணியாளருக்கு கரோனா தொற்று - கைதிகள் திருச்சி சிறைக்கு மாற்றம் - Coronavirus
நாகப்பட்டினம்: மாவட்ட சிறையில் பணிபுரிந்த பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று பாதித்ததால் கைதிகள் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று (ஜூன் 30) உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாவட்ட சிறையில் இருந்த 32 கைதிகள் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், குறைவான கைதிகள் மட்டுமே சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட சிறையில் பணியாற்றிய ஊழியருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சிறை வளாகம், அலுவலகம், கைதிகள் அறை உள்ளிட்ட பகுதிகளில் நாகை நகராட்சி நிர்வாகம் சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.