நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பரவை காய்கறி மார்க்கெட்டில் 9 வியாபாரிகளுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. ஆயுதப்படையை சேர்ந்த 9 காவலர்கள், 4 கர்ப்பிணிகள், 3 செவிலியர்கள் உள்பட 55 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.
இதன் மூலம் நாகப்பட்டினத்தில் பாதிப்பு எண்ணிக்கை 657ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மூன்று பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். சீர்காழியை சேர்ந்த 20 வயது பெண், திட்டச்சேரியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, திருமுலம் பகுதியை சேர்ந்த 50 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்தனர்.