தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழியில் ஒரேநாளில் 5 பேருக்கு கரோனா!

நாகை: சீர்காழியில் ஒரேநாளில் 5 பேருக்கு கரோனா பெருந்தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எச்சரிப்பு பலகையுடன் பாதிக்கப்பட்ட பகுதி அடைக்கப்பட்டிருக்கும் காட்சி
எச்சரிப்பு பலகையுடன் பாதிக்கப்பட்ட பகுதி அடைக்கப்பட்டிருக்கும் காட்சி

By

Published : Apr 17, 2020, 1:43 PM IST

சமய மாநாட்டில் கலந்துகொண்ட நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு நபர்களுக்கும், புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா பெருந்தொற்று இருப்பது உறுதியானது. இவர்கள் கடந்த 1ஆம் தேதி கரோனா பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

முந்தைய பரிசோதனைகளில் கரோனா இல்லை என்று வந்த நிலையில், தற்போது 5 பேருக்கும் கரோனா பெருந்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த ஐந்து நபர்களும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுசேர்க்கப்பட்டுள்ளனர்.

சீர்காழியில் ஐந்து பேருக்கு கரோனா உறுதி

இதனையடுத்து பெருந்தோட்டம், புத்தூர் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம், காவல் துறை, சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பெருந்தொற்று ஏற்பட்ட நபர்கள் வசித்த பகுதிகளைச் சுற்றியும், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாதவாறு தடுப்புகளை வைத்து அடைத்து சீல்வைத்துள்ளனர்.

இதனால், அப்பகுதியை பரிசோதனை செய்யவும், உடனடியாக சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் சீர்காழி தாலுகாவில் கரோனா பெருந்தொற்று ஆறாக அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சீனாவிடமிருந்து 5 லட்சம் துரித பரிசோதனை கருவிகள் பெறப்பட்டன - சுகாதாரத்துறை

ABOUT THE AUTHOR

...view details