மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த மூன்று சட்டப்பேரவைத் தொகுதியில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 383 வாக்காளர்கள் உள்ளனர்.
கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்க மாவட்டத்தில், 1,073 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
மயிலாடுதுறை தொகுதியில் உள்ள 342 வாக்குச்சாவடி மையங்களுக்கு கரோனா பாதுகாப்பு திட்டங்களான கையுறை, கிருமிநாசினி, முகக்கவசம், உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி, உள்ளிட்ட 12 வகையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதியில் 383 வாக்குச்சாவடி மையங்கள், சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் 348 வாக்குச்சாவடி மையங்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரும் வாக்களர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து வாக்களிக்க வேண்டுமென தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.