காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டுப் பணியாளருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் அவர்களுடன் தொடர்பிலிருந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் ஆட்சியருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது. அதனால் அவரும், குடும்பத்தாரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர்.
இதுவரை மாவட்டத்தில் 258 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 152 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவில் சர்வீஸ் தேர்வில் காரைக்காலை சேர்ந்த மாணவி புதுச்சேரி மாநிலத்தில் முதலிடம்