தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நூறு நாள் திட்ட பணியாளர்களிடையே கொரோனா விழிப்புணர்வு! - நூறு நாள் திட்ட பணியாளர்களிடையே கொரோனா விழிப்புணர்வு

நாகை: திருப்பூண்டி கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களிடையே கொரானா வைரஸ் தற்காப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

corona awareness program among 100 days workers in nagai
நூறு நாள் திட்ட பணியாளர்களிடையே கொரோனா விழிப்புணர்வு

By

Published : Mar 14, 2020, 4:40 PM IST

Updated : Mar 14, 2020, 5:26 PM IST

பெரும்பாலான உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரானா வைரஸ் தாக்குதலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களிடையே கொரானா வைரஸ் தற்காப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நோய் வருமுன் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என மருத்துவர்கள் விளக்கி கூறினர். நிகழ்சியில், கைளை அடிக்கடி சோப்பினால் கழுவ வேண்டும், தும்மும் போதும் இருமும் போதும் முகத்தை துணியினால் மூடி பாதுகாப்பாக இருக்கவேண்டும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுவை ஏற்படுத்தினர்.

நூறு நாள் திட்ட பணியாளர்களிடையே கொரோனா விழிப்புணர்வு

நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட 100 நாள் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Last Updated : Mar 14, 2020, 5:26 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details