மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அத்துறை சார்பில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து இன்று (மார்ச் 6) ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம், எருக்கூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர், அதனைத்தொடர்ந்து சீர்காழி வட்டார அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு இருந்த நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லலிதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,
"மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரச்னை, கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் மக்கள் தொடர்ந்து தயக்கம்காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 92 விழுக்காடும், இரண்டாம் தவணை 73 விழுக்காடும் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 80 விழுக்காடும், இரண்டாம் தவணை தடுப்பூசி 56 விழுக்காடும் மட்டுமே செலுத்திக்கொண்டு தமிழ்நாட்டில் குறைந்த அளவு செயல்பாடு உள்ள மாவட்டமாக உள்ளது.