தமிழ்நாடு

tamil nadu

சம்பள நிலுவைத் தொகை கேட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

By

Published : Feb 24, 2021, 10:27 PM IST

மயிலாடுதுறை அருகே என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், 20 மாத சம்பள நிலுவைத் தொகை கேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

சம்பள நிலுவைத் தொகை கேட்டு  கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
சம்பள நிலுவைத் தொகை கேட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 1987ல் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டது. கிழக்கு ஆசியாவிலேயே முதன்மை சர்க்கரை ஆலை என பெயரெடுத்த இந்த ஆலையானது அதிகாரிகளின் அலட்சியத்தால் நஷ்டத்தை சந்தித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு 110 விதியின் கீழ் சர்க்கரை ஆலையை புனரமைக்க ரூ.58 கோடி நிதி ஒதுக்கினார். ஒதுக்கப்பட்ட நிதி முறையாக கிடைக்காததால் 2017ம் ஆண்டு முதல் ஆலை மூடப்பட்டு விட்டது.

அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் பலர் பல்வேறு ஆலைகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 149 தொழிலாளர்கள் கடந்த 20 மாதமாக சம்பளமின்றி பணி செய்து சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அதிகாரிகளிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், முன்னாள் முதல்வர் பிறந்த தினமான இன்று சிஐடியு செயலாளர் ஜெயபால் தலைமையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஒருநாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். இதன் பிறகும் சம்பள நிலுவைத் தொகை கிடைக்கவில்லையெனில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:காஷ்மீரின் கைவினைக்கலையை 68 வயதிலும் பேணிகாக்கும் குலாம் நபி தார்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details