நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கிளியனூரில் உள்ள கடைகளில் பூட்டை உடைத்து தொடரும் கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்சுதீன் என்பவரது மளிகை கடை, காசிம் என்பவரது பெட்டிகடை, ஹபீப் ரகுமான் என்பவரது டீ கடை, நஜீபுதீன் என்பவரது கடையில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பணம், பொருட்கள் ஆகியவற்றை கடைகளின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத ஒருவர் கொள்ளையடித்து செல்வது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.