தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்துக் கட்சியினரும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாய் ஈடுபட்டுவருகின்றனர். சுயேச்சை வேட்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.
நாகை மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தனியார் கல்லூரியில் முதுகலை கணினி பயன்பாடு இறுதி ஆண்டு பயின்றுவரும் அனுசியா வேணுகோபால் என்ற மாணவி திமுக வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக கிராம மக்கள் ஒன்றிணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.