நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கீழவெளியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்துவந்தனர். இந்த நிலையில் சில நாள்களுக்கு முன் சிறுமியிடம் கட்டடத் தொழிலாளி ஆசைவார்த்தை கூறி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
அதையடுத்து சிறுமியின், பெற்றோர் மகளைக் காணவில்லை என மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், கட்டடத் தொழிலாளி கைதுசெய்யப்பட்டு, சிறுமி மீட்கப்பட்டார்.