மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ. ராஜகுமார் தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் நகரத் தலைவர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் தொண்டர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இன்று சுதந்திர தினத்தையொட்டி காந்தி சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் அருகே இருக்கும் காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தில் முன்னாள் நகரத் தலைவர் செல்வம், அவரது ஆதரவாளர்கள் கட்சி கொடியேற்ற சென்றனர். அப்போது, காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வந்த நகரத் தலைவர் ராமானுஜம் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் தலைவர் கொடி ஏற்றக்கூடாது என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.