மாயிலாடுதுறை: அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை,மகாளயபட்சம், மத்தியாஷ்டமி உள்ளிட்ட காலங்களில் புனித நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட கர்ம பூஜைகள் சிறப்பாக செய்வதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசை திதி நடைபெறும். ஆனால், எப்போதாவது சில நேரங்களில் ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் இடம்பெறும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்றன. ஆடி மாதமான இன்று (ஜூலை 17) ஒரு அமாவாசை திதியும் ஆகஸ்ட் 16ஆம் தேதி மற்றொரு அமாவாசை திதியும் வருவதால் பக்தர்களிடையே ஆடி அமாவாசை குறித்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதில் ஒரு சிலர் இன்றைய தேதியில் அமாவாசை திதியை கடைப்பிடித்து முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பலி கர்ம பூஜைகளை செய்து வருகின்றனர். அதன் படி மயிலாடுதுறையில் ஓடும் காவிரி துலாகட்டத்தில் 16 தீர்த்தகிணறுகள் அமைந்துள்ள புனித ஆற்றில் சுற்று வட்டார பகுதி கிராமப்புறங்களைச் சேர்ந்த ஒரு சிலர் முன்னோர்களுக்கு திதி அளித்து வழிபாடு செய்தனர். வழக்கமான கூட்டம் இல்லாமல் ஓரளவுக்கு மட்டுமே கூட்டம் காணப்பட்டது.
இதையும் படிங்க:Yamuna water: மெல்ல குறைகிறது யமுனை நதியின் நீர்மட்டம்!