நாகை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதில் மீனவர்களுக்கிடையே நடுக்கடலில் மோதல் ஏற்படுவது வாடிக்கையாகிவருகிறது.
இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் அருகே கீச்சாங்குப்பம் மீனவர்கள் 120 பேர், மற்றொரு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்களை விசைப்படகில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளனர்.
அப்போது, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஆறு மீனவர்கள் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி இந்தத் தாக்குதலைக் கண்டித்து வெள்ளப்பள்ளத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடுக்கடலில் மீனவர்கள் மோதலில் ஈடுபடுவதும் விசைப்படகைக் கொண்டு பைபர் படகு மீது மோதி தாக்குதலில் ஈடுபடும் காணொலி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே மோதல் இதையும் படிங்க:காரைக்கால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை மீனவர்கள் புகார்!