டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டத்தைக் கொண்டுவந்த மத்திய அரசைக் கண்டித்தும் மயிலாடுதுறையில் தரங்கம்பாடி அருகே ஆக்கூர் முக்கூட்டில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது - Farmers protest
நாகப்பட்டினம்: டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
Nagapattinam communist party
கொட்டும் மழையில் நடைபெற்ற இந்தச் சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாலையை மறித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையிலான காவல் துறையினர் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.