மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே மணல்மேடு பேரூராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் மணல்மேடு, கடலங்குடி, திருச்சிற்றம்பலம், வில்லியநல்லூர், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் கடலூர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
மாணவர்கள் காலை, மாலை கல்லூரி வருவதற்கும் திரும்ப செல்வதற்கும் போதிய பேருந்து வசதி இல்லாததால் கூட்ட நெரிசலில் பயணித்தும், படிக்கட்டில் தொங்கியபடியும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.