நாகப்பட்டினம்:கல்லூரி மாணவர்கள் கெத்து காட்டுவதற்காக காவல் நிலையம் முன்பு டிக் டாக் செய்வது, நடனமாடி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வெளிப்பாளையம் காவல் நிலையம் முன்பு வந்த கல்லூரி மாணவர்கள் சிலர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி ரகளையில் ஈடுபட்டனர்.
பாரதிதாசன் அரசு கல்லூரியில் பயிலும் மாணவர் விக்னேஷ் பிறந்தநாளை சக நண்பர்கள் காவல் நிலையம் முன்பு கொண்டாடியுள்ளனர். எந்தவிதமான அச்சமுமின்றி காவல் நிலையம் முன்பு கல்லூரி மாணவர்கள் வந்தனர். இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன்மீது கேக்கை வைத்தனர். விக்னேஷ் கேக்கை வெட்ட சக நண்பர்கள் ஸ்பிரே அடித்து அட்டகாசம் செய்தனர்.