தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயற்கை உபாதை கழிப்பதற்கு வயலுக்குச் சென்ற கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு - சீர்காழியை அடுத்த தில்லைவிடங்கன் பகுதியை சேர்ந்த அபிமணி

சீர்காழி அருகே இயற்கை உபாதை கழிப்பதற்கு வயலுக்குச் சென்ற கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இயற்கை உபாதை கழிப்பதற்கு வயலுக்கு சென்ற கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
இயற்கை உபாதை கழிப்பதற்கு வயலுக்கு சென்ற கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

By

Published : May 11, 2022, 7:08 PM IST

மயிலாடுதுறைமாவட்டம், சீர்காழியை அடுத்த தில்லைவிடங்கன் பகுதியைச் சேர்ந்தவர், அபிமணி (21). இவர் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே, நேற்று(மே.10) அபிமணி இயற்கை உபாதை கழிப்பதற்கு வயல் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் அபிமணி தூக்கி வீசப்பட்டு கிடந்துள்ளார். நீண்ட நேரத்திற்குப் பிறகே, அவ்வழியாக சென்றவர்கள் மின்சாரம் தாக்கி கிடந்த அபிமணியை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு 108 வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.

அபிமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர், காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

மின் வாரிய பொறியாளர் சம்பவ இடத்தில் விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சென்னை அடுக்குமாடி குடியிருப்பு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 4 வயது குழந்தை பலி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details